Tuesday, June 15, 2021

மனித உடல் எப்படி உருவானது?

சித்தர்களின் உடற்கூற்று இரசாயனம் பற்றிய விளக்கம்.


மண்ணுடன் மண் சேர ஆவது எலும்பு .

மண்ணுடன் நீர் சேர ஆவது தசைகள் .

மண்ணுடன் நெருப்புச் சேர ஆவது தோல் .

மண்ணுடன் வாயு சேர ஆவது நரம்பு .

மண்ணுடன் ஆகாயம் சேர ஆவது ரோமம் .


நீருடன் மண் சேர ஆவது உமிழ் நீர் .

நீருடன் நீர் சேர ஆவது சிறுநீர் .

நீருடன் நெருப்புச் சேர ஆவது வியர்வை .

நீருடன் வாயு சேர ஆவது ரத்தம்

நீருடன் ஆகாயம் சேர ஆவது சுக்கிலம் /சுரோணிதம் .


நெருப்புடன் மண் சேர ஆவது பசி .

நெருப்புடன் நீர் சேர ஆவது தாகம் .

நெருப்புடன் நெருப்புச் சேர ஆவது நித்திரை .

நெருப்புடன் வாயுச் சேர ஆவது சோம்பல் .

நெருப்புடன் ஆகாயம் சேர ஆவது ஆண்பெண் சங்கமம் .


வாயுவுடன் மண் சேர ஆவது கிடத்தல் .

வாயுவுடன் நீர் சேர ஆவது நடத்தல் .

வாயுவுடன் நெருப்பு சேர ஆவது மடக்கல் .

வாயுவுடன் வாயு சேர ஆவது ஓடுதல் .

வாயுவுடன் ஆகாயம் சேர ஆவது குதித்தல் .


ஆகாயத்தில் மண் சேர ஆவது விருப்பு .

ஆகாயத்தில் நீர் சேர ஆவது வெறுப்பு .

ஆகாயத்தில் நெருப்புச் சேர ஆவது அச்சம் .

ஆகாயத்தில் வாயுச் சேர ஆவது வெட்கம் .

ஆகாயத்தில் ஆகாயம் சேர ஆவது மோகம் .


இதுதான் உடலின் ரசாயனம் !


இதுவரை உலகில் விஞ்ஞான அறிஞர்கள் கண்டது மொத்தம் நூற்றுப் பதினேழு மூலங்கள்(elements); ஆனால்

நம் மெய்ஞான சித்தர்களுக்கோ மொத்தம் எல்லாமே ஐந்துதான் .


ஆகாயம் ,

வாயு , 

நெருப்பு, 

நீர் , 

மண்

இவையே பூதங்கள் ஐந்து 

இவைகளையே மொத்த மூலங்கள் ஐந்துஎனக் கொண்டது சித்தர் அறிவியல் .


இவையே தனித்தும் இணைந்தும் ஆகின்றன உலகப்பொருட்கள் யாவையுமாய் அவைகளே ஆகின்றது அதுவே நமது மேனியுமாகவும் அமைகிறது 


இந்த உடல்

இந்த உலகம்

இந்த பிரபஞ்சம் என அனைத்தும் பஞ்ச பூதங்களின் சேர்க்கைகளால் உருவானவையே..


இதனையே ஔவையார் தன் ஞானக்குறளில்


"பரமாய சக்தியுட் பஞ்சமா பூதத்

தரமாறிற் தோன்றும் பிறப்பு"

என்கிறார்.


பரம் = பரம் பொருளிடத்தில்

ஆய = உண்டான

சக்தியுள் = பராசக்தியிலடங்கிய

பஞ்சமாபூதம் = ஐந்து பெரிய பூதங்களும்

தரமாறிடில்= தங்களில் ஒன்றொன்று மாறினால் ,

பிறப்பு – இந்த ஜனனமானது

தோன்றும் = உண்டாகும் .


இந்த இரண்டடியில் எத்தனை பொருள் பொதிந்திருக்கிறது என்பது

வியப்பாக இருக்கிறது அல்லவா ?


சித்தர்களின் அத்தனை ஞானத்தையும் தன் இரண்டடிக் குறளில் எத்தனை விளக்கமாகக் கூறியிருக்கிறார்




இந்து மதம் என்பது என்ன?

இந்து மதம் என்பது என்ன?

பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இந்து மதம் என்பது சைவம் வைணவம் சாக்தம் போன்ற மதங்களை இணைத்த மதத்தின் பொதுவான பெயர் என்று.

ஆனால் உண்மை அதுவல்ல..

இந்திய பண்பாட்டின் ஆன்மீக அறிவின் அடையாளமாக விளங்கும் நால்வேதங்கள் குறிப்பிடும் கடவுள், கடவுளின் மூர்த்தங்கள், தேவர்கள்(ஆதித்தர்கள், வசுக்கள், உருத்திரர்கள்) இவர்களில் யாரோ ஒருவரை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட மதங்களே சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் போன்ற மதங்கள்.

வேதம் கடவுள் என்றோ கடவுளின் மூர்த்தங்கள் என்றோ அல்லது தேவர்கள் என்றோ குறிப்பிடுபவர்களைத்தான் மேற்படி மதங்கள் முழுமுதற் கடவுள் என்றோ முதன்மைக் கடவுள் என்றோ கூறுகின்றன. 

வேதத்தில் குறிப்பிடாத ஒன்றை கடவுள் என்று பின்பற்றும் மதங்கள் இங்கு எதுவுமே இல்லை.

வேதம் கூறும் பிரம்மம் தோன்ற ஆதிபராச்கதிக்கு ஆதாரமாக விளங்கும் சிவம்தான் சைவர்களின் முதன்மைக் கடவுள்.

சூரியனின் ஏழு தொழிற்பாட்டு பெயர்களில் ஒன்றானதும், வேதம் கூறும் சக்தியின் அம்சமானதுமான விஷ்ணுவே வைணவர்களின் முதன்மைக் கடவுள்.

வேதம் கூறும் விந்து சக்தியின் மூர்த்தமான முருகனே கௌமாரர்களின் முதன்மைக் கடவுள்.

நாத சக்தியின் மூர்த்தமான விநாயகனே காணபத்தியர்களின் முதன்மைக் கடவுள்.

தேவர்களின் தலைவன் என்று வேதம் சொல்லும் இந்திரனும், ஞானகுரு என்று சொல்லும் தட்சிணாமூர்த்தியுமே பௌத்தர்களின் முதன்மையான கடவுள்கள்.

இப்போது சொல்லுங்கள் பல மதங்களை இணைத்த பொதுப்பெயரா இந்து என்பது? அல்லது

வேதங்கள் கூறும் கடவுள் மூர்த்தங்கள், தேவர்களை வணங்குபவர்களை குறிக்கும் பொதுவான பெயரா "இந்து" என்று...




கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...