நான்கு வர்ணங்களை படைத்ததாக கிருஷ்ணன் சொல்கிறானா?
‘சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:’
இந்த ஒற்றை கீதை வரியை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள். கிருஷ்ணன் நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் என்கிறான். அவன்தான் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்கிறார்கள்.
இந்துக்களிடம் சாதிகள் கிடையாது. வர்ணம் மட்டுமே உள்ளது. உலகில் வர்ணம் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது. நிற்க,
சரி, கடவுள் படைத்தார் என்றால் எல்லாவற்றிற்கும் கடவுள்தான் காரணமாக இருக்க முடியும். நால்வர்ண பாகுபாட்டையோ, சாதிய பாகுபாட்டையோ கடவுள் இல்லாத இன்னொருவர் வந்து படைத்திருக்க முடியாது இல்லையா?
கிருஷ்ணன் சொல்கிறான்,
"நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்" அவன் பரமாத்மாவாக பேசுகிறான். கடவுளாகவோ, கிருஷ்ணன் என்ற மனிதனாகவோ அந்த வசனத்தை பேசவில்லை. நாம் இருக்கும் பிரபஞ்சம் போன்று பலகோடி பிரபஞ்சங்கள் சேர்ந்தது பரம். அந்த பரத்தின் ஆன்மா பரமான்மா. ஆன்மா என்பது மாயையைச் சார்ந்தது. கடவுள் மாயையை சாராதது. ஆன்மா பிறப்பு இறப்பு அழிவற்றது. ஆனால் அது சார்ந்த மாயை அந்த நிலைகளுக்கு உட்பட்டது.
கிருஷ்ணன் பரமாத்மாவாகவே பேசுகிறான். மாயை என்பது ஒரு சக்திநிலை மாற்றம். அதனால்தான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் மாயா சக்தியின் தோற்றம் என்று சொல்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் மாயையின் வெளிப்பாடுகளே.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த கீதை வசனம் நால்வர்ணம் பற்றியா பேசுகிறது என்று பார்ப்போம்,
இந்த வசனத்தில் சாதுர்வர்ண்யம் என்றுதான் உள்ளது. சதுர்வர்ணம் என்று வரவில்லை, சதுர் வர்ணத்தைத்தான் சாதுர்வர்ண்யம் என்று கிருஷ்ணன் மாற்றி கூறினானா? இல்லை மாற்றி வியாசர் எழுதிவிட்டாரா?
சாதுர்வர்ண்யம் என்றால் நல் வர்ணத்தை என்று பொருள். சாது என்றால் நல்லவர் என்று பொருள்.
"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்" என்று சொல்லி ஒரு வசனம் வருகிறது. பரித்ராணாய ஸாதூனாம் என்றால் நல்லவர்களை காப்பதற்கும் என்று பொருள். ஆக சாதுர் வர்ண்யம் என்பது நான்கு வர்ணங்கள் என்பது தவறு. நல் வர்ணங்களை என்பதே சரி.
வர்ணங்கள் நான்கு என்றால், நல் வர்ணங்களை கிருஷ்ணன் தானே படைத்ததாக கூறுகிறான் என்றால் நான்கு வர்ணங்களும் நல் வர்ணங்கள் என்றுதானே அர்த்தம். வர்ணங்களைக் கடந்த ஒரு மாக்கள் கூட்டம் எல்லாக் காலங்களிலும் இருக்கிறது தானே.
படைத்தல் என்பது கிருஷ்ணனின் தொழிலல்ல, காத்தலே அவன் தொழில். இந்த உலகை மக்களைக் காப்பதற்கான நல்ல மக்களை நானே படைத்தேன் என்பதே அவன் சொல்வதன் பொருள்.
பிரம்மன் நல்லவர்கள் தீயவர்கள் என்று எல்லோரையும் படைக்கிறான். தீயவர்களுக்கும் எல்லாம் கிடைக்க வழிசெய்கிறான். கிருஷ்ணன் அவ்வாறு இல்லை, அவன் நல்லவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறான். நல்லவர்களை மட்டுமே காக்கிறான். தீயவர்களிடத்தே கிருஷ்ணன் சங்கரனாக மாறிவிடுகிறான்.
பிரம்மன் இந்துக்களால் கொண்டாடப்படாமல் போனதற்கும் கிருஷ்ணன் கொண்டாடப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -7
No comments:
Post a Comment