ஆணவம் என்றால் உங்கள் மனதில் உடனே தோன்றுவது என்ன?
திமிர்
செருக்கு
தற்பெருமை
மூர்க்கமான அணுகுமுறை
சொல்கேளாமை
இப்படி ஏதாவது ஒன்று உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.
உண்மையில் இந்து ஆன்மீக தத்துவத்தில் ஆணவம் என்று சொல்லப்படுவது அதுவல்ல, நாம் மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஆணவத்தின் வெளிப்பாடுகளேயன்றி அவை ஆணவமல்ல.
ஆணவம் என்றால் செயல்கள் மீதான விருப்பம் என்பதாகும். உயிர்கள் அனைத்தும் செயல்களாலும் செயல்கள் மீதான விருப்பங்களாலுமே துன்பப்படுகின்றன. இந்த விடயத்தை மக்கள் புரிந்து கொள்ள இலகுவாக "ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்" என்று புத்தர் போதித்தார்.
ஆசை என்பது செயல்கள் மீதான விருப்பம். அதுதான் ஆணவம்.
புத்தர் ஆணவமே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று போதித்திருந்தால் அது பலராலும் புரியப்படாமல் போயிருக்கலாம்.
இந்து ஆன்மீகமானது,
கடவுள்
ஆன்மா
ஆணவம்
கர்மம்
மாயை என்ற ஐந்தினைப்பற்றிப் பேசுகிறது.
கடவுள், ஆன்மா என்ற இரண்டினைப் பற்றியே வேதாந்த, சித்தாந்த தத்துவங்கள் அதிகமாக பேசுகின்றன.
ஆனால்,
புத்தர் ஆணவம் என்பதைப் பற்றி பேசினார்.
கிருஷ்ணர் கர்மத்தை பற்றி பேசினார்.
ஆதிசங்கரர் மாயையை பற்றிப் பேசினார்.
கடவுள் ஆன்மா பற்றி மட்டுமல்லாமல் ஆணவம், கர்மம், மாயை என்னும் ஏனைய பொருட்கள் பற்றி பேசியவர்களும் மகான்களாக, வழிகாட்டிகளாக, அவதார புருஷர்களாக போற்றி நிற்பதே இந்து தர்மத்தின் அழகு.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -8
No comments:
Post a Comment