சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறப்புறச் சமயம் என்று வகுக்கப்படும் சமயப் பிரிவில் யோகசாரமும் ஒன்று. இது யோகசார பௌத்தம் என்று அறியப்படுகிறது.
இது மகாயான பௌத்த மத உட்பிரிவுகளில் ஒன்றாகும்.
நாம் காணும் காட்சிகள், இந்த உலகம், பிரபஞ்சம் எல்லாம் பொய் என்பதும், அவ்வாறு எதுவும் இல்லை என்பதும் யோகசார வாதிகளின் வாதம்.
புத்தியில் தோன்றும் காட்சி விரிவே உலகமாக, பிரபஞ்சமாக, உயிர்களாக என்று தோன்றுகின்றது. ஆனால் அவ்வாறு எதுவும் கிடையாது. எல்லாம் சூன்ய மயமாகவே உள்ளது என்பது இவர்களது வாதம்.
யோக நிலையில் உண்மை கிடைக்கும் என்பதையும், கடவுள் எமக்கு உள்ளேயே இருக்கிறார் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இவ்வாறு கூறுவதால் யோகசாரர் என்று அழைக்கப்படுகின்றனர். யோகத்தின் சாரமாக கிடைக்கும் முடிவு என்பது அதன் பொருள்.
தொடர்ச்சியாக செய்யப்படும் யோகத்தின் விளைவாக உள்ளே ஒரு வெறுமை மட்டுமே தோன்றுவதால் அதுதான் உண்மை நிலையென்று அவர்கள் வாதிக்கின்றனர். அதனால் அந்த சூன்ய நிலையே உண்மையானது என்றும் இந்த உலகில் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் புத்தியில் தோன்றும் காட்சிகளே அன்றி அவற்றில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் வாதிக்கின்றனர்.
இந்த சமய பிரிவினர் கௌதம புத்தர் தோன்றிய ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகிய ஒரு பிரிவினராவர். ஆனால் இதுதான் கௌதம புத்தர் உருவாக்கிய கோட்பாடு என்பது போன்ற தோற்றம் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புத்தர் இவ்வாறான எந்தவொரு கோட்பாடுகளையும் முன்வைத்ததோ, ஆதரித்ததோ இல்லை.
அறியப்படாத விடயங்கள் தொடர்பில் எந்தவொரு கற்பனையான முடிவுகளும் தேவையற்றது என்பதே கௌதம புத்தரின் போதனையாக இருந்துள்ளது.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -20
No comments:
Post a Comment