ஸ்மார்த்தம் என்பது ஆதிசங்கரர் உருவாக்கிய தத்துவ வழிமுறைகளை பின்பற்றும் ஒரு பிரிவினராவர்.
ஆன்மா கடவுளுடன் இரண்டறக் கலந்து நிற்கக்கூடியது. அதற்கு தடையாக இருப்பது மாயையே என்பது ஸ்மார்த்த கோட்பாடாகும். மாயை என்றால் மாறக்கூடியது என்று புரிந்து கொள்ளலாம். மாற்றத்திற்கு உட்படக் கூடியது எல்லாம் மாயையே.
எமது உடல், உலகம், அண்டம் என்று நாம் காணும் அனைத்தும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. அவை அனைத்துமே மாயை.
ஒன்று பலவாறாக தோன்றுவது மாயை. ஆன்மா மாறாதது. அதுதான் உண்மை. மாறாத ஆன்மாவை மாறும் இந்த மாயையே பற்றி நிற்கிறது. இந்த மாயையில் இருந்து ஆன்மா விடுபட்டால் அங்கே ஆன்மாவுடன் எஞ்சி நிற்பது கடவுள் என்றும் இருப்பு மட்டுமே.
இந்த மாறும் மாயையை கடந்துவிட்டால் அங்கே கடவுள், ஆன்மா என்ற இரண்டு மட்டுமே எஞ்சியிருக்கும்.
மாயை இல்லை என்றால் ஆன்மாவிற்கும் ஒரு வரையறை இல்லாமல் போய்விடும்.
வரையறை இல்லாத கடவுளுடன் வரையறை இல்லாத ஆன்மா எல்லையில்லாமல் கலந்து நிற்கும். இந்த நிலையில் கடவுள், ஆன்மா இரண்டும் பிரித்தறிய முடியாத வகையில் இரண்டறக் கலந்து நிற்கும்.
இதுதான் அத்வைதம். இதுதான் ஸ்மார்த்த கோட்பாடு.
சரி,
சைவம் என்ன சொல்கிறது?
சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது?
சைவ சித்தாந்தமும் அதே அத்வைதம் பற்றியே பேசுகிறது. மாயை நீங்கும் போது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் என்றே கூறுகிறது.
சைவ சித்தாந்தம், ஸ்மார்த்தம் இரண்டும் ஒரே கோட்பாடுகளை உடையவை. அவை இரண்டும் வேறுபட்டவை என்று பிரிவினை பேசுபவர்கள் அதற்கான காரணங்கள் எதையும் முன்வைப்பதில்லை.
இங்கே இரண்டு பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளும், சடங்கு சம்பிரதாய பின்பற்றுதல்களும் வேறுபட்டு நிற்கலாம். ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் சைவ சித்தாந்தம், ஸ்மார்த்தம் இரண்டுமே ஒன்றுதான்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -9
No comments:
Post a Comment