Thursday, May 4, 2023

கடவுள் செயல்களுக்கு காரணம் இல்லையா?

 #ஆன்மீகம்_அறிவோம்-2

செயல்கள் அனைத்தும் விருப்பு வெறுப்பு எனும் நிலைகளில் இருந்தே செய்யப்படுகிறது. விருப்பு வெறுப்பைக் கடந்துவிட்டாலே செயல்கள் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

 உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களே விருப்பு வெறுப்பைக் கடந்து விடுகிறார்கள். அவ்வாறு இருக்கையில் கடவுள் விருப்பு வெறுப்புள்ள ஒரு அற்பமான நபராக இருக்க முடியாது. அதனால் கடவுள் என்பவர் விருப்பு வெறுப்பு என்பவை உடையவனாக இருக்க முடியாது.

ஒரு செயல் நடைபெறுவதற்கு மூன்று விடயங்கள் தேவை
1. செயலைச் செய்வதற்கான அறிவு
2. செயலுக்காக மூலப் பொருட்கள்
3. செய்யும் நபர்

உயிர்களே செயல்கள் அனைத்தையும் செய்கின்றன. 

செயல்களுக்கான மூலப் பொருட்கள் மாயையில் இருந்து தோன்றுகிறது.

உயிர்கள் செயல்களை ஆற்றுவதற்கான அறிவையும், ஆற்றல் இருப்பையும் இறைவனிடம் இருந்து பெறுகின்றன.

இறைவனின் இருப்பில் இருந்து ஒரு உயிர் தன் செயல்களுக்கான அறிவைப் பெறும் என்றால் அது சித்தம் எனப்படும்.

மாயை சார்ந்து உயிர்கள் அந்த அறிவைப் பெறும் என்றால் அது புத்தி என்றும் கூறுவர்.

அதனால்தான் கடவுள் செய்பவன் அல்ல, செயற்காரணன் என்று சைவ தத்துவங்கள் கூறுகின்றது.

செய்பவை- உயிர்கள்
மூலகாரணம்- மாயை
நிமித்த காரணம்- கடவுள் என்கிறது சித்தாந்தம்.

இறைவன், உயிர்கள், மாயாமலங்கள் மூன்றும் அனாதியானவை என்பது சைவத்தின் அடிப்படை. அதுவே முப்பொருள் உண்மை என்று கூறப்படுகிறது.

சர்வம் சிவமயம்





No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...