Saturday, May 27, 2023

பாடாணவாத சைவம்

சைவ சித்தாந்த வாதிகள் அகச் சமயம் என்று வகுக்கும் ஆறு சமய பிரிவுகளில் பாடாணவாத சைவமும் ஒன்று.

கடவுள் ஆன்மா மலங்கள் என்னும் முப்பொருட்களில் ஆன்மாவை மலங்கள் பற்றி நிற்கும் என்பதும் முக்தி நிலையை அடையும் ஆன்மாக்கள் மலங்களில் இருந்து விடுபடும் என்பதும் ஏனைய அகச் சமயங்களின் வாதம். 

ஆனால் முக்தி அடையும்போதும் ஆன்மாக்கள் கன்மம் மாயை என்னும் மலங்களில் இருந்தே நீங்கும், ஆணவத்தை விட்டு நீங்காது என்பது பாடாணவாதிகளின் வாதம்.

மாயை என்பது சடப்பொருள். சுத்த மாயை என்பது சடப்பொருட்களின் மூலம். ஆன்மா மாயையில் உண்டாக்கும் மாற்றங்களே கர்மம். 

ஆன்மா மாயையை சாராது நீங்கும் போது கர்மத்தில் இருந்து விடுபடும். 

இயல்புநிலையில் கடவுள், ஆன்மா என்பவை தனித்திருக்கலாம். மாயை சுத்த மாயை என்னும் நிலையில் தனித்திருக்கலாம். மாயை ஆன்மா என்பவை தனித்திருக்கும் போது கர்மம் என்பது இல்லாமல் போய்விடலாம். ஆனால் ஆணவம் என்பது ஆன்மாக்கள் சார்ந்து இருக்கும். முக்தி நிலையில் அது உறங்கு நிலையிலிருக்கலாம் ஆனால் ஆன்மாவை விட்டு நீங்காது என்பது பாடாணவாதிகளின் வாதம்.

சைவ சித்தாந்தம் அந்த வாதத்தை மறுக்கிறது. ஆணவம் என்பது ஆன்மாவில் இருப்பது கிடையாது. ஆணவம் என்பது ஆன்மாவின் விருப்பம் கிடையாது, ஆன்மா மீது மாயை உண்டாகும் விருப்பத் தூண்டலே ஆணவம். 

மாயை ஆன்மாவை தூண்டும். அந்த ஆணவத் தூண்டலின் விளைவே கர்மம். கர்மம் என்பது ஆணவத்தின் தூண்டலால் மாயையில் உண்டாக்கும் மாற்றம். 

ஆன்மாக்கள் அஞ்ஞான நிலையில் மாயையின் விருப்பத் தூண்டலுக்கு உட்பட்டு, ஆணவத்தின் பிடியில் சிக்குண்டு நிற்கிறது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -16



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...