மெய்கண்ட சாத்திரங்கள் அல்லது சித்தாந்த சாத்திரங்கள் என்பது 14 நூல்களாகும். இவற்றை பின்பற்றும் வழிமுறையே சித்தாந்த சைவம் எனப்படும்.
திருவுந்தியார்
திருக்களிற்றுப்படியார்.
சிவஞானபோதம்
சிவஞான சித்தியார்.
இருபா இருபது
உண்மை விளக்கம்
சிவப்பிரகாசம்
திருவருட்பயன்
வினா வெண்பா
போற்றிப் பஃறொடை
கொடிக்கவி
நெஞ்சுவிடு தூது
உண்மை நெறி விளக்கம்
சங்கற்ப நிராகரணம்
இவையே அந்த பதிநான்கு சித்தாந்த நூல்கள். இவற்றுள் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞானபோதமே முதன்மையான, முழுமையான நூலாகும். இந்த மெய்கண்ட சாத்திரங்கள் கூறும் தத்துவங்களின் அடிப்படையில் பின்பற்றப்படும் வழிமுறையே சித்தாந்த சைவம் எனப்படும்.
சித்த சைவம் என்பது நாத சைவத்தை குறிக்கும் பெயராகும். சித்தர்களின் வழியாக அவர்களின் சிந்தனைகளின் வழியாக பின்பற்றப்படும் வழிமுறை என்பதால் நாதசைவமானது சித்த சைவம் என்றும் அழைக்கப்படும்.
சித்த சைவத்திற்கு என்று வரையறையோ, முடிவான தர்க்க முடிவுகளோ எதுவும் கிடையாது. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான அணுகுமுறையை பின்பற்றி உள்ளனர். சித்த சைவம் எனப்படும் நாத சைவத்தின் பிறப்பிடம் மராத்தியப் பகுதியாகும்.
பதினெட்டு சித்தர்கள் என்று கூறுவார்கள். அந்த பதினெட்டு சித்தர்கள் யார் என்பதுகூட வரையறுக்கப்பட்ட ஒன்று கிடையாது. பலர் பலவாறு பதினெண் சித்தர்களின் பெயர்களை கூறியுள்ளனர்.
இந்த பதினெட்டு சித்தர்களில் பல்வேறு இனங்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சித்தர்களாக குறிப்பிடப்படுகிறார்கள்.
இங்கே பலர் சித்தர்களின் வழிமுறையை பின்பற்றுபவர்கள் சித்தாந்த சைவர்கள் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சித்தர் பாடல்கள் தான் சித்தாந்த தத்துவத்தை விளக்குகிறது என்று தவறாக நம்பிக்கொண்டுள்ளார்கள்.
சித்தர்களில் ஒருவர் கூட சித்தாந்த மரபினர் இல்லை. சித்தர்கள் என்போர் நாதசைவ மரபினர்.
சித்த சைவம், சித்தாந்த சைவம் இரண்டினதும் வேறுபாட்டை அறிந்து கொள்வோம்.
சித்தாந்த சைவத்தை பின்பற்ற விரும்புபவர்கள் சிவஞான போதம் கூறும் தத்துவ நிலைகளை உணர்ந்து அதன்வழியில் சைவத்தை பின்பற்ற வேண்டும்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -11
No comments:
Post a Comment