Tuesday, May 30, 2023

மத்யமிகம் /மாயாவாதம்

சைவ சித்தாந்த வாதிகள் புறப்புறச்சமயம் என்று வகுக்கும் ஆறு சமயங்களில் ஒன்று. 

பிரதான பௌத்த மதப்பிரிவுகளில் ஒன்றான மகாயான பௌத்த உட்பிரிவு வகைப்பாட்டில் வரும் 9 பிரிவுகளில் மத்யமிகமும் ஒன்று. 

புதிய சிந்தனை மாற்றங்கள், தர்க்கமுடிவுகள் என்பவற்றை ஏற்கும் புத்தரின் வழிமுறையை அடிப்படையைக் கொண்டது மகாயான பௌத்தம். 

உலகம் உண்மையானதோ, பொய்யானதோ அல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது மத்யமிக சமயத்தின் வாதம்.

இந்த உலகமோ பிரபஞ்சமோ கண்ணில் தோன்றுவதால் அதுதான் உண்மை என்றும் கிடையாது, அது உண்மையானது இல்லை என்பதால் அவ்வாறு ஒன்று இல்லை அது பொய்யான தோற்றம் என்பதும் கிடையாது.

நாம் காணும் உலகத்தின் தோற்றம் உண்மை இல்லை என்றாலும் அதில் உண்மையான ஒரு பொருள் உள்ளது என்பது மத்யமிக சமயத்தின் வாதமாகும்.

உண்மையான ஒன்று வேறு ஒன்றாக தோன்றுவது மாயை எனப்படும். இந்த உலகம் அதில் காணும் பொருட்கள் அனைத்தும் உண்மையான பொருள் ஒன்றின் தோற்ற மாறுபாடுகளே. அந்த மாய நிலையைப் பற்றி பேசுவதால் இவர்கள் மாயாவாதிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

சைவ சித்தாந்த தத்துவங்கள் கூறும் சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் தத்துவங்களை இதனை ஒத்ததாகவே கருதவேண்டும். 

ஆதிசங்கரரும் இதனை ஒத்த கருத்தையே தனது வாதமாக முன்வைத்தார்.

இந்த உலகம் உண்மையானதோ பொய்யானதோ கிடையாது மாயை வடிவமானது என்ற மத்யமிக வாதத்தை முன் வைத்தவர் நாகார்ஜுனர் என்பவராவார்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -19



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...