Monday, May 15, 2023

மனம்

மனத்தை உடையவர்கள் மனிதர்கள் என்கிறார்கள் எம் முன்னோர்கள். 

மனம் என்றால் என்ன?

எம்மை சூழ உள்ள சமூகத்தின் மீது எமக்கு உண்டாகும் பிரதிபலிப்பே மனம் எனப்படுகிறது.

நாம் எம் சமூக சூழலில் இருந்து கேட்டு, பார்த்து அறிந்தவைகளில் இருந்து உலகம் தொடர்பான எண்ணங்களை, சந்தேகங்களை வடிவமைத்துக் கொள்கிறோம். இவ்வாறு எம்மால் வடிவமைக்கப்பட்ட எண்ணங்கள் சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக பிரதிபலிப்பே மனமாகும்.

ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியாக கல்வி கேள்விகளை உடையவர்கள் ஆதலால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வடிவத்தில் மனம் இருக்கும். ஆனாலும் சமூக குழுக்கள் ஒவ்வொன்றும் சில பொதுவான வாய்ப்புக்களை உடையவை என்பதால் சில பொதுவான சமூக மனப்பான்மையும் காணப்படும்.

எம் ஆன்மீகம் கூறும் அந்தகரணங்கள் நான்கில் மனமும் ஒன்று. மற்றைய மூன்று புத்தி, சித்தம், அகங்காரம்.

ஒன்றைப் பற்றிய சிந்தனையோ, சந்தேகமோ ஒருவனுக்கு உண்டாகவில்லை என்றால் அவன் மனிதனில்லை. ஏதோ ஒன்றை சந்தேகப்படாமல் கேள்வி கேட்காமல் நம்பும் கூட்டம் மக்களல்ல விலங்குகள் என்கிறார்கள் இந்து வாழ்வியலை பின்பற்றிய எம் முன்னோர்கள்.

அதனால்தான் மதங்கள் மனிதர்களை விலங்குகளாக மாற்றுகிறது என்கிறார்கள் அவர்கள். மதம் என்றால் கேள்வி கேட்க முடியாத நம்பிக்கை என்பதாகும்.

மனத்தை நீக்குதலே ஞானம் என்று ஆன்மீகம் கூறும். ஆனால் அதே ஆன்மீகம் மனம் என்ற ஒன்று இருப்பதையே அறியாமல் வாழ்பவர்கள்களை விலங்குகள் விலங்குகள் என்கிறது.

நாம் எந்த நிலையில் இருக்கிறோம்..
விலங்குகள்?
மனிதர்கள்?

புத்தர்
சித்தர்
அகங்காரகர் என்போர் யார் என்று இன்னொரு பதிவில்..

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -6



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...