Sunday, May 21, 2023

நாங்கள் இந்துக்களா? சைவர்களா?

நிச்சயமாக நாம் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பது எமது பாரம்பரிய வாழ்வியலை குறிக்கும் பெயர். 

நாம் அனைவரும் ஒருகாலத்தில் வனங்களிலும், மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் வேட்டையாடி அலைந்து பின் விவசாயம் கைத்தொழில் என்று நாகரீகமடைந்த ஆதிக்குடிகளின் தொடர்ச்சிகளே..

ஆம், நாம் பழங்குடி மக்களின் சந்ததிகளே, இதில் வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவுமே கிடையாது. இங்கு யாரும் வேற்றுக் கிரகங்களில் இருந்தோ, அல்லது யாரோ ஒருவர் வந்து ஜீபூம்பா சொல்லியோ யாரையும் படைக்கவில்லை.

இந்து வாழ்வியல் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எமது மூதாதையர்களின் வாழ்வியல், பாரம்பரிய கூறுகளை சிதைக்காமல், காலமாற்றத்திகு ஏற்ப அவற்றை வழிவழியாக கடத்தும், ஒரு அழகான வாழ்வியல் முறை. 

உலகத்தில் அழிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பாரம்பரிய வாழ்வியல் முறை இந்து வாழ்வியல் மட்டுமே. 

இதை இப்படியும் சொல்லலாம், உலகத்தில் அழிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் பாரம்பரிய வாழ்வியல் முறையே இந்து என்று.

இந்து என்பது வாழ்வியல், சைவம் என்பது தத்துவ கோட்பாடு.

சைவம், ஸ்மாரத்தம், வைணவம், பௌத்தம் என்பவை எல்லாம் கோட்பாட்டு புரிதல் வேறுபாடுகள், சடங்கு சம்பிரதாய வேறுபாட்டு குழுமங்கள்.

சைவ சித்தாந்த கோட்பாடுகளை அதன் உண்மை விசாரணைகளை ஏற்றுக் கொண்டாலும், யாரும் தமது பாரம்பரிய வழிமுறைகள், குலதெய்வ வழிபாடுகள் என்பவற்றை கைவிடவில்லை.

காலனித்துவ காலத்தில் நிர்ப்பந்த மதமாற்றம் செய்யப்பட்டு, தமது பாரம்பரியத்தை, குலதெய்வ வழிபாட்டை தொலைத்தவர்கள் இருக்கிறார்களே தவிர யாரும் வேண்டுமென்றே தவிர்க்கவில்லை.

இன்று குலதெய்வம் தெரியாது என்பவர்கள் காலனித்துவ காலத்தில் நிர்ப்பந்த மதமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பாரம்பரிய அடையாளத்திற்கு திரும்பியவர்களாக இருப்பார்கள்.

பலரும் சிவலிங்கத்தை, சிவனை கடவுள் என்று வழிபட்டால் அவர்கள் தங்களை சைவர்கள் என்று நினைக்கிறார்கள். நீங்கள் சிவன் என்ற பெயரில் கடவுளை வழிபடுவதால் சைவர்களாக முடியாது. சைவ சித்தாந்த தத்துவங்கள் கடவுள் என்பதை எதுவாக வரையறுக்கிறதோ அதை உணர்ந்து நின்று பின்பற்றுபவர்கள் மட்டுமே சைவர்கள். சைவ சித்தாந்தம் கூறும் கடவுளின் ஒரு குணமே சிவமாகும். 

நாம் அனைவரும் இந்து வாழ்வியலில் இந்துக்களாக வாழ்ந்துகொண்டு தான் சைவ சித்தாந்த தத்துவங்களையும், அதன் கடவுள் கோட்பாடுகளையும் பின்பற்றுகிறோம். ஒரு கோட்பாட்டை பின்பற்றுவதற்காக ஒருவன் தன் பாரம்பரியத்தை இழக்க வேண்டும் என்று என்ன அவசியம் வந்தது.

பாரம்பரிய அடையாளங்களை சிதைத்து அழிப்பது என்பது பாலைவனத்தில் தோன்றிய வறட்டு சிந்தனைகள் எம்மிடையே விட்டுச் சென்ற எச்சங்கள். அன்னிய ஆக்கிரமிப்பு காலத்தில் மதம்மாறிச் சென்று தமது பாரம்பரியத்தை, குலதெய்வ வழிபாட்டை தொலைத்தவர்கள் சிலர் நாங்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று மக்களை குழப்புகிறார்கள். அவர்கள் வாலறுந்த நரிகள்.

தாங்கள் தொலைத்த பாரம்பரிய தொடர்பை இன்னொருவர் பேணுவது அவர்களால் சகிக்க முடியவில்லை. பாலைவனத்தில் தோன்றிய வறண்ட சிந்தனைகளின் தாக்கத்தில் அவர்கள் வம்சமும் சிலகாலம் இருந்துள்ளது அல்லவா.? அதன் பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது.

நான் சைவசித்தாந்த தத்துவங்களை ஏற்றவன். என் இந்து பாரம்பரியத்தில் வாழ்பவன். இங்கே இந்துக்கள் என்று சொல்பவர்கள் அனைவரும் அவ்வாறுதான் வாழ்கிறார்கள். தத்துவங்களை ஏற்றதற்காக வாழ்வியல் அடையாளங்களை தொலைக்காமல் வாழ்பவர்களே இந்துக்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -10





No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...