சித்தாந்த சைவம் குறிப்பிடும் 24 சமய பிரிவுகளில், அகப்புறச்சமயம் எனும் வகைப்பாட்டில் வரும் ஆறு சமயங்களில் ஒன்றாகும்.
பைரவரை வழிபடும் இப்பிரிவினர் பைரவரை சிவனின் அம்சமாக, சிவனின் புதல்வனாக என்று வழிபடுகின்றனர். 64 பைரவர்கள், அட்ட பைரவர்கள் என்று பலவிதமாக பைரவரை வழிபடும் இப்பிரிவினர் பலியிடுதல், வேள்வி செய்தல் என்பவற்றையும் வழிபாட்டு முறையாக கொண்டவர்கள்.
பைரவ சமயத்தினர் தங்களை சைவர்கள் என்று கூறினாலும், சைவத்தின் சித்தாந்த பிரிவினர் அவர்களை நிராகரிக்கின்றனர்.
சிவனை கர்த்தாவாக, செயல்களை செய்பவராக பைரவ சமயத்தினர் நம்புகின்றனர். படைத்தல் காத்தல் அழித்தல் என்று எல்லா செயல்களும் சிவனின் மூர்த்தங்களால் மேற்கொள்ளப்படும் என்று பைரவ சமயத்தினர் கூறுகின்றனர்.
பைரவர்கள் சிவனே கடவுள் என்று ஏற்றாலும், சிவன் பலவாறாக தோன்றுவார் என்றும், செயல்களை ஆற்றுவார் என்றும் கூறுவதை நிராகரிக்கும் சித்தாந்த பிரிவினர், அதனால் அவர்கள் புறக்கணிக்கத்தக்க சிந்தனைகளை உடைய சிவனை கடவுளாக ஏற்ற சமயிகள் என்று அகப்புறச் சமயிகளாக குறிப்பிடுகிறார்கள்.
இலங்கையில் வடக்கே உள்ள தமிழர்கள் பலர் இந்த பைரவ சமயத்தினராகவே உள்ளார்கள். தமிழர் பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாண பகுதிகளில் அதிகளவான பைரவர் ஆலயங்கள் உள்ளன. எண்ணற்ற பைரவர் ஆலயங்கள் இருக்கும் யாழ்ப்பாண மண்ணில் ஒரு சில சிவாலயங்களே உள்ளது. ஞானவைரவர், நரசிம்ம வைரவர், காலபைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர் என்ற பெயர்களில் பைரவர் பரவலாக வழிபடப்படுகிறார்.
திருக்கேதீச்சர ஆலயம் பற்றிய தேவார பதிகத்தில் "செத்தாரெலும் பணிவான்திரு கேதீச்சரத்தானே" என்றே சுந்தரர் பாடுகிறார். எனவே திருக்கேதீச்சர ஆலயமும் கிறிஸ்தவர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பு மண்டை ஓட்டு மாலையை அணிந்து நின்று அருள்புரியும் பைரவரின் ஆலயமாகத்தான் இருந்துள்ளது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் புத்தளம் முன்னேச்சரத்திலும் பலிகொடுத்து வழிபடும் பைரவ வழிபாட்டுத் தொடர்ச்சி காணப்படுகிறது. எனவே அதுவும் பைரவ வழிபாட்டு தலமாகவே இருந்திருக்க வேண்டும்.
இலங்கையில் செல்வாக்கு பெற்றிருக்கும் பைரவ வழிபாடு தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிராத போதும், ஆந்திர மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்றிருக்கிறது.
உள்ளிருந்து, வெளியே இருந்து என்று பல்வேறு வகையான தாக்குதல்களை சந்தித்தாலும் பைரவ சமயம் இன்றும் தன் சிறப்பான பாரம்பரிய தொடர்ச்சியை பாதுகாக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் உள்ள கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் பைரவ சமயத்தின் பாரம்பரிய சிறப்புவாய்ந்த ஒரு ஆலயமாகும்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -12
No comments:
Post a Comment