சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறப்புறச் சமயம் என்னும் வகைப்பாட்டில் வரும் ஒரு சமய பிரிவாகும்.
இது கடவுள் மறுப்பையும், பல்தெய்வ வழிபாட்டையும் கொண்ட பௌத்தம் அல்லாத ஒரு சமயமாகும்.
சீவன், அசீவன் எனும் உயிர்கள், உயிரற்றவை என்னும் பகுப்புடன் பாவம், புண்ணியம், கர்மா, மறுபிறப்பு, பிறப்பறுத்தல், கர்மவிடுவிப்பு, வீடுபேறு என்பவற்றையும் ஏற்கும் சமய பிரிவாகும்.
கடவுள் என்ற ஒன்றை மறுக்கும் இவர்கள் வீடுபேறு அடைந்தவர்களை தெய்வங்கள் என்று வணங்குகிறார்கள். ரிஷபநாதர் முதல் மகாவீரர் வரையான 24 தீர்த்தங்கரர்களையும் இவ்வாறு தெய்வம் என்று பின்பற்றி வணங்குகிறார்கள்.
தீர்த்தங்கரர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முதல் பலலட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். இவ்வாறான தீர்த்தங்கரர்கள் எப்போதும் தமக்கு அருகில் இருந்து வீடுபேற்றை அடைய வழிகாட்டுகிறார்கள் என்றும், அதனால் அவர்களை அருகர்கள் என்றும் அழைக்கிறார்கள். அருகர்களை வழிபடுபவர்கள் என்பதால் அருகதர்கள் எனப்படுகிறார்கள்.
இவர்களில் ஆடை அணியாத நிர்வாண துறவிகள் கூட்டம், வெள்ளை ஆடை அணியும் துறவிகள் கூட்டம் என்று இரு பிரிவினர் உள்ளனர். திகம்பரர், சுவேதம்பரர் என்று அப்பிரிவினர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களது ஆலயங்களில் மூலவராகவும் இந்த அருகர்களே உள்ளார்கள். புலன்களை அடக்கி உணர்ச்சிகளை வென்றவர்கள் அருகர்கள் என்று அவர்களை வடமொழியில் செயனா என்று அழைக்கின்றார்கள். செயனாக்களை பின்பற்றும் மதம் என்பதால் செயனர்கள் என்றும் இன்று சைனர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சமண மதங்கள் என்று குறிப்பிடப்படும் மதங்களில் இந்த அருக மதம் பிரதானமானது. மற்றையவை சாவகம் எனப்படும் உலகாயதமும், பௌத்தமும் ஆகும்.
இந்த சமண மதங்கள் கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களை தமது மதங்களுக்கு மாற்றுவதற்காக இந்து கடவுளர்களை சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள் என்று கூறி தமது மதங்களுக்குள் உள்ளீர்த்துள்ளார்கள். அவ்வாறு தெய்வம் என்று கூறி உள்ளீர்த்த கடவுள்களின் தன்மையை மறைப்பதற்காக அந்த கடவுள்கள் பற்றிய புதிய கதைகளை உருவாக்கி, அந்த கதைகளில் ஒரு மனித கதாபாத்திரமாக அந்த கடவுளரை மாற்றினார்கள். ஏனென்றால் சமண மத நம்பிக்கைகள் கடவுள் என்ற ஒன்றை ஏற்பதில்லை. அவர்களது மத நம்பிக்கையின் படி வாழ்ந்த, இறந்த உயிர்களையே தெய்வங்கள் என்று கூறுகிறார்கள்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்னும் இந்து கடவுளை மானிட பெண்ணாக சித்தரித்தது போல அவர்கள் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு இந்து கடவுளை மனிதர்களாக மாற்றினார்கள். இதிகாசங்கள்,புராணங்கள் என்று குறிப்பிடப்படும் நூல்கள் பலவும் இவர்களது ஆதிக்க காலத்தில் எழுதப்பட்ட அல்லது திரித்து எழுதப்பட்ட நூல்களே. மௌரியர்களின் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறுபட்ட புனைவு, திரிபு நூல்கள் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
இந்து கடவுளர்களை மனிதர்களாக மாற்றுதல், தமது மனித தெய்வங்களை இந்து ஆலயங்கள் போன்ற அமைப்பினுள் வைத்தல் போன்ற பல்வேறு பித்தலாட்டங்களையும், கோபுரம், பலிபீடம், கொடிமரம் அமைத்தல் தேர் இழுத்தல் என்று அத்தனை அடையாளத் திருட்டுக்களையும் இவர்கள் செய்திருக்கிறார்கள்.
தமிழ் சங்கம் என்ற பெயரில் அமைப்பினை நிறுவி அதனூடாக மதம் பரப்பும் பித்தலாட்ட வேலையையும் செய்துள்ளார்கள்.
சமண மதங்கள் என்பவை ஆன்மீகம் என்பது இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றும், கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனமாகவே இருந்துள்ளது. ஒரு மன்னனே துறவு வேடம் பூண்டு 12000 துறவு வேடதாரிகளுடன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வந்தான் என்பதும், இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு 12000 துறவு வேடம் தரித்தவர்கள் என்பதும் எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பதும், அவர்களின் அதிகாரத்தை கைப்பற்றும் அமைப்பு முறைக்கு எடுத்துக்காட்டாகும்.
அவர்கள் தீர்த்தங்கரர்கள் என்று குறிப்பிடப்படும் அனைவரும் மன்னர்கள், மன்னர் குடும்பத்தவராகவே உள்ளார்கள். இது மதத்தின் பெயரால் மக்களை அந்த மன்னர் வம்சத்தை ஏற்கச் செய்யும் ஒரு பொறிமுறையாகவே உள்ளது. ஆண்டவர் என்ற பதமும் இதில் இருந்தே வந்துள்ளது. இந்த தேசத்தை மக்களை ஆண்டவர் என்னும் பொருளிலேயே அந்த பெயர் உள்ளது.
மதத்தின் பெயரால் மக்களை மாற்றி அந்த மக்களைக் கொண்டே அதிகாரத்தை கைப்பற்றுவது, அவ்வாறு கைப்பற்றிய அதிகாரத்தை கொண்டு அதிகார எல்லைகளை விஸ்தரித்து அந்த எல்லைக்குள் தமது மதத்தைப் பரப்புவது என்பதாகவே இவர்களது நடைமுறை இருந்துள்ளது.
மதம் என்பது அதிகாரத்தை கைப்பற்றும் பரப்பும் ஒரு கருவியாகவும், மக்களிடையே அதிகாரத்தை செலுத்தி ஆட்சி அதிகாரத்தை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாகவுமே இருந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தையும் பித்தலாட்ட நடைமுறைகளையும் பயன்படுத்தி பரப்பப்பட்ட இவர்களது மதம் மௌரியர்களின் வீழ்ச்சியின் பின் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்தது. இன்று அந்த மதத்தின் பெயரில் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.
ஆன்மீக சிந்தனைகள் அற்று பரப்பப்படும் மதங்கள் அனைத்தும் இவ்வாறான அரசியல் ஆதிக்க அமைப்புக்களே அன்றி வேறில்லை எனலாம்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -25
No comments:
Post a Comment